ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 2 ராக்கெட் குண்டுகள் விழுந்து வெடித்தன. தூதரகங்கள், அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு கொண்ட பசுமை மண்டல பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் உருவானது. காலியான இடத்தில் ராக்கெட் விழுந்து வெடித்ததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த வாரத்தில் மட்டும் நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் இது என்றும் ராணுவம் கூறி உள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த ஜனவரி மாதம் ஈராக்கின் பாக்தாத் அருகே அமெரிக்க விமானப்படை நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதி சுலைமான் கொல்லப்பட்டதையடுத்து ஈரான்-அமெரிக்கா இடையே மோதல் போக்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.