ரோகித் சர்மா மிக சிறந்த கேப்டன் – சுரேஷ் ரெய்னா

0
169
இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பதற்கு பல மாதங்களாக போராடி வருபவர் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னா. இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை  கேப்டனாக செயல்பட்டு வருகிறார். சுரேஷ் ரெய்னா டோனியின் செல்லபிள்ளை என்றே சொல்லலாம். தற்போது உள்ள வீரர்களில் ரோகித் சர்மா மிக சிறந்த வீரர். அவர் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். மிகவும் அமைதியானவர், மற்றவர்களின் கருத்தை ஏற்றுக்கொண்டு சக வீரர்களுக்கு நம்பிக்கை அளிப்பதில் விருப்பம் கொண்டவர். எல்லாவற்றுக்கும் மேலாக தானே முன்னின்று அணியை வழிநடத்துவதை விரும்பக்கூடியவர். ரோகித் சர்மா தலைமையில் ஆசிய கோப்பை வென்ற போது நான் விளையாடி உள்ளேன்.
அப்போது ரோகித் சர்மா இளம் வீரர்களான ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கு அவர் எந்த அளவுக்கு நம்பிக்கை அளித்தார் என்பதை பார்த்து இருக்கிறேன். உங்கள் கேப்டன் மற்றவர்கள் சொல்வதை கவனித்தாலே நிறைய பிரச்சினைகளை தீர்க்க முடியும். அத்துடன் வீரர்களின் மனரீதியான பிரச்சினையை சமாளிக்க முடியும். என்னை பொறுத்தமட்டில் இருவரும் அற்புதமான கேப்டன்கள். டோனிக்கு அடுத்து முன்னணி வீரர்களில் ஒருவராக ரோகித் சர்மா விளங்குகிறார்.  டோனியையும் விட அதிக ஐ.பி.எல். கோப்பையை ரோகித் சர்மா வென்றுள்ளார்.  எனவே இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த டோனி, ரோகித் சர்மா தான் என்று  சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
Previous articleதண்ணிய போட்டு, தொப்புள் தெரிய குலுங்க குலுங்க ஆட்டம் போடும் அமலாபால்.. கொதிக்கும் இணையதளம்!
Next articleஆஷ்லி பார்ட்டி திடீர் விலகல்