நடக்கவுள்ள டி20 உலக கோப்பை தொடரோடு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ரோகித் சர்மாவில் இந்த முடிவுக்கு பின்னணியில் ஹர்திக் பாண்டியா இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, தனக்கு கேப்டன் பதிவு வழங்கினால் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வருவதாக டிமான்ட் செய்ததாகவும், இதன் காரணமாகவே அவருக்கு கேப்டன் பதவி வழங்கி மும்பை அணியில் இணைக்கப்பட்டதாகவும், இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சொல்லப்பட்டது.
மேலும், ஹர்திக் பாண்டியாவுக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையே கருத்து மோதல் இருப்பதாகவும், இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு, ஆட்டத்தில் சொதப்பி மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு, தொடரிலிருந்து வெளியேறியுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இருவருக்கும் இடையே கருத்து மோதல் இருந்தாலும் களத்தில் இறங்கினால் ஆட்டத்தில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும், அந்த வகையில் ரோகித் சர்மாவும், ஹர்திக் பாண்டியாவும் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால் இருவருமே நடக்க உள்ள டி20 உலக கோப்பை தொடரின் இந்திய அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் பதவியோடு களம் இறங்க உள்ளனர்.
இதுதான் தற்போது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் தனிப்பட்ட பிரச்சனையால் இந்தியாவில் மானத்தை உலக நாடுகள் மத்தியில் கப்பல் ஏற்றி விடுவார்களோ என்ற அச்சமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
என்னதான் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடுவது சாதாரண விஷயம் தான் என்று ரோகித் சர்மா சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், இந்த சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.
இதில் உச்சக்கட்டமாக தற்போது நடக்கவுள்ள இந்த 2024 டி20 உலக கோப்பை தொடருக்குபின் ரோகித் சர்மா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதன் பின்னணியில் ஹர்திக் பாண்டியா இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.