ஆடும் லெவனில் இல்லாத ஷமிக்குக் கடைசி ஓவர் ஏன்?… கேப்டன் ரோஹித் ஷர்மா பதில்!

0
153

ஆடும் லெவனில் இல்லாத ஷமிக்குக் கடைசி ஓவர் ஏன்?… கேப்டன் ரோஹித் ஷர்மா பதில்!

இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இன்று நடந்த பயிற்சி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்னயித்த 187 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா, 180 மட்டுமே சேர்த்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில் ஆஸி அணிக்கு இறுதி ஓவரில், 9 ரன்கள் மட்டுமே தேவைப்படட்து.

இறுதி ஓவரை வீசிய ஷமி வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து கடைசி 4 பந்துகளிலும் நான்கு விக்கெட்களை வீழ்த்தினார். இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இத்தனைக்கும் இந்த போட்டியின் ஆடும் லெவனில் ஷமி இல்லை. ஆனால் பயிற்சி போட்டியில் வெளியில் இருந்தும் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் அவரை வீச வைத்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா.

இந்நிலையில் போட்டிக்குப் பிறகு ஏன் ஷமிக்கு கடைசி ஓவரைக் கொடுக்கப்பட்டது என ரோஹித் ஷர்மா பேசியுள்ளார். அதில் “அவர் (ஷமி) நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் வருகிறார், எனவே அவருக்கு ஒரு ஓவர் கொடுக்க விரும்பினோம். அவருக்கு ஒரு சவாலை கொடுக்க விரும்பினேன் மற்றும் இறுதி ஓவரை வீச அனுமதித்தேன், அவர் என்ன செய்தார் என்பதை நீங்கள் பார்த்தீர்கள்.” எனக் கூறியுள்ளார்.

Previous articleதமிழ்நாடு அரசின் கீழ் இயங்குவது தொழிலாளர் நலத்துறையா அல்லது முதலாளி நலத்துறையா? – சீமான் ஆவேசம் 
Next articleகருணை கொலை அடிப்படையில் 4000 உயிரிழப்பு!! புதைக்கும் நேரத்தில் ஏற்பட்ட பரபரப்பு!