ரோஹித் ஷர்மாவின் வித்தியாசமான பவுலிங் கூட்டணி… ஆனாலும் வொர்க் அவுட் ஆன ஐடியா!

0
175

ரோஹித் ஷர்மாவின் வித்தியாசமான பவுலிங் கூட்டணி… ஆனாலும் வொர்க் அவுட் ஆன ஐடியா!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான நேற்று நடந்த இந்த முதல் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புகளுக்கு 190 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ரோஹித் ஷர்மா 64 ரன்கள் சேர்த்தார். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 19 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இதையடுத்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 122 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலிங் தேர்வு வித்தியாசமாக அமைந்தது. இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா மற்றும் ரவி பிஷ்னாய் என மூன்று சுழல் பந்து வீச்சாளர்களோடு களமிறங்கினார் கேப்டன் ரோஹித் ஷர்மா.

வழக்கமாக டி 20 போட்டிகளில் 2 சுழல்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வதே அரிதானது. ஆனால் ரோஹித் ஷர்மாவின் இந்த மூவர் கூட்டணி வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது. இந்த மூவரும் சேர்ந்து மொத்தம் 8 விக்கெட்களில் 5 விக்கெட்களை வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதினேஷ் கார்த்திக்கின் வான வேடிக்கை… பவுலர்கள் அபாரம்… முதல் டி 20-ல் இந்தியா வெற்றி!
Next articleகாஷ்மீர் எல்லையில் நூற்றுக்கு மேற்பட்ட பயங்கரவாதி ஊடுருவல்!..அதிர்ச்சியில் உறைந்து போன ராணுவ தளபதி !..