ரோஹித் ஷர்மா அரையிறுதியில் விளையாடுவாரா?… குழம்பிய ரசிகர்களுக்கு வெளியான அப்டேட்!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா வலைப்பயிற்சியின் போது காயம் அடைந்த நிலையில் அவர் அரையிறுதிப் போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்திய அணி டி 20 உலகக்கோப்பையில் அரையிறுதிப் போட்டிக்கு வெற்றிகரமாக முன்னேறியுள்ளது. பேட்டிங்கில் கே எல் ராகுல், சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி ஆகியோர் மட்டுமே சரியான பங்களிப்பை அளித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் ஷர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் சோபிக்கவில்லை.
இந்நிலையில் அரையிறுதி போட்டியில் அவர்களின் பங்களிப்பை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்கிறது. நாளை அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இதற்கான வலைப்பயிற்சியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா காயம் அடைந்ததாகவும், அதனால் அவர் தொடர்ந்து வலைப் பயிற்சியில் ஈடுபடவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.
மேலும் அரையிறுதிப் போட்டியில் ரோஹித் ஷர்மா விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் நேற்று ரோஹித் ஷர்மா மீண்டும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் விளையாடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
ரோஹித் ஷர்மாவுக்கு இதுவே கடைசி டி 20 உலகக்கோப்பையாக இருக்க வாய்ப்புள்ளது. அவருக்கு தற்போது 35 வயது ஆகிறது. இதனால் அவர் தலைமையில் கோப்பையை வென்று கொடுத்து வெற்றியுடன் செல்ல அவரும் , அவர் ரசிகர்களும் மிகுந்த ஆர்வமாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.