ரோஹித் ஷர்மாவுக்கு பதில் கேப்டனாக ரிஷப் பண்ட்… கடைசி 2 போட்டிகளுக்கு இந்திய அணியில் நடக்கும் மாற்றம்

0
283

ரோஹித் ஷர்மாவுக்கு பதில் கேப்டனாக ரிஷப் பண்ட்… கடைசி 2 போட்டிகளுக்கு இந்திய அணியில் நடக்கும் மாற்றம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் கேப்டன் ரோஹித் ஷர்மா விளையாட வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே  தற்போது நடந்து வரும் டி 20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

நேற்று நடந்த மூன்றாவது போட்டியின் போது இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா களத்தில் பேட்டிங் செய்யும் போது காயம் அடைந்தார். ரோஹித் 5 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார், ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் விளையாடிக் கொண்டிருந்த போது தசைப் பிடிப்பு காரணமாக வெளியேறியதாக சொல்லப்படுகிறது. ரோஹித் ஸ்டிரைக் எடுக்கவிருந்தபோது, ​​இந்திய பிசியோ கமலேஷ் ஜெயின் மைதானத்திற்கு ஓடி வருவதை கேமரா காட்டியது, நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, ரோஹித் அவரது முதுகைப் பிடித்துக் கொண்டு வெளியேறினார்.

இந்நிலையில் ஆசியக்கோப்பையைக் கணக்கில் கொண்டு ரோஹித் ஷர்மா அடுத்த இரு போட்டிகளில் ஓய்வெடுத்துக் கொள்வார் எனத் தெரிகிறது. அப்படி அவர் விலகும் பட்சத்தில் அணிக்குக் கேப்டனாக செயல்பட்டு ரிஷப் பண்ட் வழிநடத்துவார் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே ரிஷப் பண்ட் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கேப்டனாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous articleஆயுதப்படை போலீசார் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட சம்பவம்!..காரணம் என்ன? அதிர்ச்சியில் காவல் அதிகாரிகள்!..
Next articleநேற்றைய போட்டியில் கோஹ்லியின் மற்றொரு சாதனையை தகர்த்த ரோஹித் ஷர்மா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here