இலங்கைக்கு அனுப்பப்படுகிறதா இந்திய ராணுவம்? இந்திய தூதரகம் அளித்த விளக்கம்!

0
75

இலங்கை அரசுக்கு எதிராக அந்த நாட்டில் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கி வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு இந்திய அரசு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருப்பதாக தெரிகிறது.

பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் இந்த கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். என்று சொல்லப்படுகிறது. அசாதாரண சூழ்நிலையை சமாளிப்பதற்காக இலங்கைக்கு இந்தியா ராணுவத்தை அனுப்பும் என செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால் எந்த விதத்தில் யோசித்தாலும் ஒரு நாட்டிற்கு ஆதரவாக தன்னுடைய ராணுவத்தை அனுப்பும் ஒரு மிகப்பெரிய முடிவை இந்திய அரசு அவ்வளவு எளிதில் மேற்கொண்டு விடாது. ஆகவே இது ஒரு வதந்தி என்று தான் சொல்லப்படுகிறது.

ஆகவே சுப்ரமணிய சுவாமியின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் இந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை, இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கு பொருத்தமானது கிடையாது என தெரிவித்துள்ளது.

ஆகவே இலங்கை மக்களுக்கு ஆதரவாக இந்தியா இருக்கிறது அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு ஜனநாயக முறைப்படியும், வியூகங்களின் அடிப்படையிலும் தங்களுடைய வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை ஆதரிக்கிறது.

இந்த நிலையில், இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி நேற்று தெரிவித்ததை இலங்கைக்கான இந்திய தூதரகம் சுட்டிக்காட்டி இருக்கிறது. இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் இந்த அறிவிப்பு இந்தியாவின் நிலைப்பாட்டை இதன் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறது.