“சில வீரர்கள் ஆஸி.க்கு சென்றதில்லலை… பும்ராவுக்கு பதில் யார்…” இந்திய அணி கேப்டன் ரோஹித்

0
176

“சில வீரர்கள் ஆஸி.க்கு சென்றதில்லலை… பும்ராவுக்கு பதில் யார்…” இந்திய அணி கேப்டன் ரோஹித்

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

தொடர்ந்து டி 20 போட்டி தொடர்களை வென்றுவரும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா போட்டிக்குப் பின்பு பேசும்போது “ஒரு குழுவாக நாங்கள் ஆரம்பத்திலேயே பேசிக்கொண்ட்பொம். முடிவு என்ன நடந்தாலும் பரவாயில்லை – முன்னேற்றத்திற்கு எப்போதும் இடம் உண்டு. ஒரு அணியாக தொடர்ந்து சிறப்பாக இருக்க விரும்புகிறோம்.

பந்துவீச்சில் நாங்கள் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் இரண்டு தரமான அணிகளுக்கு எதிராக விளையாடினோம், நாங்கள் கடினமான சவால்களை சந்தித்தோம். நாம் என்ன சிறப்பாக செய்ய முடியும் என்பதை நாம் பார்க்க வேண்டும். நாங்கள் அதை நோக்கி வேலை செய்கிறோம், பவுலர்களுக்கு நிறைய தெளிவு தேவை, அதை உறுதிப்படுத்துவது எனது வேலை. நாம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் மற்றும் அதற்கான பதில்களைத் தேட வேண்டும்.

நிறைய வீரர்கள் இன்னும் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றதில்லை, அதனால்தான் நாங்கள் அங்கு சீக்கிரம் செல்கிறோம். பெர்த்தின் பவுன்ஸ் ஆகும் ஆடுகளங்களில் நாங்கள் விளையாட இருக்கிறோம். அங்கு என்ன செய்ய முடியும் என்பதைப் பார்க்க வேண்டும். அணியில் 7,8 பேர் மட்டுமே ஆஸ்திரேலியா சென்றுள்ளனர், எனவே நாங்கள் சில பயிற்சி விளையாட்டுகளை ஏற்பாடு செய்துள்ளோம். பும்ரா உலகக் கோப்பையில் இருந்து வெளியேறி விட்டர். எனவே ஆஸ்திரேலியாவில் பந்துவீசிய அனுபவம் உள்ள ஒரு பந்து வீச்சாளரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

அந்த பந்து வீச்சாளர் யாராக இருக்கப் போகிறார் என்று தெரியவில்லை, நாங்கள் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றவுடன் பார்ப்போம், அதை அங்கே கண்டுபிடிப்போம்.” எனக் கூறியுள்ளார்.

Previous article“தினேஷ் கார்த்திக்கால் எனது இடத்துக்கு ஆபத்து வந்துவிடும் போல…” சூர்யகுமார் யாதவ் ஜாலி!
Next article“தினேஷ் கார்த்திக் & ரிஷப் பண்ட் பேட்டிங் வரிசையை மாற்றியது ஏன்?” பயிற்சியாளர் டிராவிட் விளக்கம்