சென்னையில் ரூ 1.71 லட்சம் அபராதம்! காரணம் இதுதானா?

0
164
Rs 1.71 lakh fine in Chennai! Is this the reason?
Rs 1.71 lakh fine in Chennai! Is this the reason?

சென்னையில் ரூ 1.71 லட்சம் அபராதம்! காரணம் இதுதானா?

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவால் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அரசு தொடர்ந்த அறிவுறுத்தி வருகிறது. மேலும் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தகவல் தெரிவித்திருந்த நிலையில் மக்கள் அனைவரும் அலட்சியமாக முககவசம் அணியாமலேயே சென்று வருகின்றனர்.

மேலும் அந்த வகையில் நேற்று சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் முககவசம் அவர்களிடம்மிருந்து அபராதம் வசூலிக்கப்படும் பணி நடைபெற்றது. அப்போது முககவசம் அணியாத 342 நபர்களிடம் மொத்தம் 1,71,000. ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோன  தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் மார்க்கெட் மற்றும் அங்காடிகள் வணிக வளாகங்கள், திரையரங்கங்கள் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் செல்லும் பொழுது தவறாமல் முகம் அணிய வேண்டும் எனவும் சமூக இடைவேளை பின்பற்ற வேண்டும் எனவும் மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால் சென்னை மாநகராட்சியில் மக்கள் அனைவரும் அதனை முறையாக பின்பற்றவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் இம்மாதம் ஆறாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பொதுமக்கள் அதிக கூடும் இடங்களில் முககவசம் அணியாத 2,682 நபர்களிடம்மிருந்து 13,41,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இருந்தாலும் மக்கள் அனைவரும் அதை சிறிதளவும் எண்ணாமல் இருக்கின்றார்கள் என மருத்துவர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Previous article”ஒரு நாள் போட்டிகளைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்…” அஸ்வின் அதிரடி கருத்து!
Next articleமருத்துவர்கள் கூறியது என்ன? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவாரா? பரபரப்பில் கட்சி தொண்டர்கள்!