குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000! வெளிவந்த புதிய தகவல்கள்!

0
176
Rs 1000 per month for family heads! New information released!
Rs 1000 per month for family heads! New information released!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000! வெளிவந்த புதிய தகவல்கள்!

திமுக ஆட்சிக்கு வந்த முதல் மக்கள் பயனடையும் வகையில் பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன், நாங்கள் இம்முறை வெற்றி பெற்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000, நீட் தேர்வு ரத்து போன்ற திட்டங்களை அமல்படுத்துவதாக மக்களிடையே கோரியிருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து தற்போது வரை இந்த திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. மேற் போக்கிற்காக பல திட்டங்களை மக்களுக்காக செய்வது போல திமுக காட்டுகிறதே தவிர மக்கள் முன்னிலையில் கூறிய எந்த வித வாக்குறுதிகளும் சரிவர நிறைவேற்றப்படவில்லை.

தற்பொழுது முடிந்த பொங்கல் பண்டிகையையொட்டி குடும்பம் அட்டை வைத்திருக்கும் தலைவிகளுக்கு மாதம் 1000 வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என மக்கள் பெருவாரியாக எதிர்பார்த்தனர். ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பை உடைக்கும் வண்ணம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் பணத்தையும் இம்முறை வழங்கவில்லை. மேலும் நீட்தேர்வு இந்நாள்வரை ரத்து செய்யப்படவில்லை. இவ்வாறு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் திமுக கட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. மக்களுக்காக ஆவின் பாலின் விலையை திமுக அரசு குறைத்தது.அதற்கு மாற்றாக தற்பொழுது பாலின் மூலம் தயாரிக்கப்படும் நெய் போன்ற பொருட்களின் விலையை உயர்த்தி உள்ளது.

இதுவும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு மக்களுக்கும் நல்ல திட்டங்களை செய்வது போல் பாவனை காட்டிவிட்டு நாளடைவில் விலைவாசி உயர்வை மக்கள் அதிக அளவில் சந்திக்கின்றனர். இவ்வாறு இருக்கையில் இன்று தலைமைச் செயலகத்தில் மாலை 5 மணி அளவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்குதல் திட்டம் குறித்தும், நிதிநிலை அறிக்கை வேலன் அறிக்கை ஆகியவற்றிற்கு ஒப்புதல் அளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என கூறுகின்றனர்.

Previous articleஇரண்டு வழக்கில் ஜாமீன் கிடைத்துவிட்டது! இந்த வழக்கிலும் ஜாமீன் வழங்குங்கள்: -உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனு!!
Next articleஇனி திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை!