இனி திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை!

0
72

இனி திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை!

திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நேற்று காலை திருமலையில் உள்ள அன்னதானக் கூடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சாதாரணப் பக்தர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இலவச தரிசனம் தொடங்கி பத்து நாட்களுக்கு மேல் ஆகிறது. எனவே, திருமலையில் இலவச தரிசனம் தொடங்கியதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் பக்தர்களின் கூட்டத்துக்கு ஏற்ப அன்னதானம் வழங்கப்படும் என்றும் இது தொடர்பாக அன்னதானத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில், வட இந்தியாவில் இருந்து வரும் பக்தர்களுக்கு உணவுடன் ரொட்டியும், சப்பாத்தியும் வழங்கப்படும் எனவும், திருமலையில் கூடுதலாக இரு பகுதிகளில் அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சாதாரணப் பக்தர்களுக்கு விரைவான தரிசனம் வழங்கப்படும். இலவச தரிசன பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதற்காக அவர்களுக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. தரிசனம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளதை அவர் குறிப்பிட்டுள்ளார். இலவச தரிசன டிக்கெட் பெறும் சாதாரணப் பக்தர்கள் அன்றே சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். அதற்காக அவர்கள் திருப்பதி, திருமலையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

திருமலையில் உள்ளூர் ஓட்டல்களும், உணவகங்களும் வழக்கம்போல் செயல்படும். அதன் உரிமையாளர்களுக்கு எந்த ஒரு நிர்பந்தமும் விதிக்கப்படவில்லை. திருமலையில் பல்வேறு இடங்களில் தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு உணவு வழங்க கவுண்டர்கள் அமைக்கப்படும் என்று அவர் கூறினார்.