ஒரே நாளில் ரூ 15 கோடி வசூல்! மொய் விருந்தில் செய்த சாதனை!
காஜா புயல் காரணமாக பல்வேறு இடங்களில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது அதனை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.புதுக்கோட்டை , தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆனி மாதம் முதல் ஆவணி மாதம் வரை மொய் விருந்து பாரம்பரியமகா கொண்டாடுவது வழக்கம்.
அந்த வகையில் அவர்கள் புயல், கொரோனா போன்ற காரணங்களால் கொண்டாடப்பட வில்லை. ஆனால் காதணி விழா போன்றவைகள் தடையின்றி நடந்தது. அதனால் தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள காரணத்தால் நடப்பாண்டில் மொய் விருந்து காலம் முடிவிற்கு வரும் நிலையில் 31 குடும்பங்கள் இணைந்து மொய் விருந்து வைக்க ஏற்பாடு செய்தனர். அந்த மொய் விருந்தில் ஆயிரக்கணக்கான பேர் கலந்து கொண்டனர்.
அவர்கள் அனைவரும் அசைவ மொய் விருந்தில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர். தற்போது அனைத்தும் டிஜிட்டல் நிலைக்கு மாறி வரும் நிலையில் அந்த மொய் விருந்தில் அனைவரும் ஆன்லைன் மூலம் மொய் அளித்தனர். ஒரே நாளில் ரூ 15 கோடி மொய் வசூல்லாகிவுள்ளது என கூறப்படுகிறது.அதில் நெடு வாசல் கிராமத்தை சேர்ந்தவருக்கு மட்டும் ரூ 2 கோடி வசூல் ஆனது குறிப்பிடதக்கது.