பன்னீர்செல்வத்திற்கு சவால் விட்ட எடப்பாடி பழனிச்சாமி!

ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவுக்கு எதிராக பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவு பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.

இந்த வழக்கில் ஏற்கனவே வாதங்கள் யாவும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதி ஜெயச்சந்திரன் ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் செல்லாது. ஜூன் மாதம் 23ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே அதிமுகவில் தொடர வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பை எதிர்க்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது.

மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிவைகள் எம் துரைசாமி, சுந்தர்மோகன், முன்பு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி கோரிக்கை வைத்தார். இந்த வழக்கு வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும், நீதிபதிகள் அறிவித்திருக்கிறார்கள்.