சாலை விபத்தில் உயிரிழந்தவர்க்கு ரூ.2 லட்சம் நிதியுதவி : அப்போ சாலையை சரிசெய்ய மாட்டீர்களா என மக்கள் கேள்வி?

0
137
#image_title

சாலை விபத்தில் உயிரிழந்தவர்க்கு ரூ.2 லட்சம் நிதியுதவி : அப்போ சாலையை சரிசெய்ய மாட்டீர்களா என மக்கள் கேள்வி?

சென்னை சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நிதியுதவியும் அளித்துள்ளார்.

சென்னை என்.எஸ்.சி போஸ் சாலையில் பயங்கர விபத்து அரங்கேறியது. இந்த எதிர்பாராத விதமாக நடந்த சாலை விபத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், காவனூர்புதுச்சேரி, கம்மாளம்பூண்டியைச் சேர்ந்த கௌரி என்ற பெண் உயிரிழந்தார். அவருக்கு வயது 60.

இதுகுறித்து அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கௌரி என்ற பெண் சாலை விபத்தில் உயிரிழந்த செய்தியறிந்து வருத்தமுற்றதாக வேதனை தெரிவித்தார். அத்துடன், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். மேலும், கௌரி அவர்களின் குடும்பத்திற்கு 2 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் தமிழக அரசு தேசமடைந்த சாலையை சீர்படுத்தவும், புதிய சாலைகளை அமைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகரில் தினந்தோறும் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதனை சரி செய்யும் பொருட்டு சென்னை மாநகராட்சி நிர்வாகம் துரிதமாக செயல்பட வேண்டும் என்றும் ஆனால் அதிகாரிகள் மிகவும் மொத்தனமாக செயல் படுவதாகவும் மக்கள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Previous articleமொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!! 296 பேர் பரிதாபமாக பலி!! 150க்கும் மேற்பட்டோர் காயம்!!! 
Next articleபள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. காலாண்டு தேர்வு அட்டவணை வந்தாச்சு!!