பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2000 அபராதம்! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு !!
தமிழகத்தில் பொது இடத்தில் புகை பிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.தமிழகத்தில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.இந்நிலையில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொது இடங்களில் நின்று புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று பொது இடங்களில் வாசகங்கள் எழுதி இருந்தாலும் அதை யாருமே கண்டுகொள்வதில்லை. அதையும் மீறி புகை பிடிப்பவர்களுக்கு உடலுக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு அருகில் இருப்பவர்கள் அதை சுவாசிப்பதால் அவர்களுக்கும் உடல் நலக்கேடும் ஏற்படுகிறது.
மேலும் பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறை, காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் உட்பட 20 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம், மார்க்கெட் வீதி மற்றும் பொது இடங்களில் இன்று சுகாதார ஆய்வாளர்கள் அமுதா ,சுப்பிரமணி, சங்கரன் மற்றும் சண்முகம் ஆகியோர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தார்கள்.
அப்போது பேருந்து நிலையத்தில் புகை புகைப்பிடித்திருந்த 20 நபர்களுக்கு 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் அபதாரம் விதித்தார்கள் .இதன் மூலம் பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.