“நான் முதல்வன்” மாணவர்களுக்கு ரூ.7,500 ஊக்கத்தொகை!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!!
தமிழ்நாட்டில் நான் முதல்வன் என்னும் திட்டமானது, திமுக வின் விளையாட்டு துறை அம்ற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் துவங்கப்பட்டது.
இதன் மூலமாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகள் எளிதாக இருக்குமாறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து யுபிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான பயிற்சிகள் மற்றும் வசதிகள் செய்து தரப்படும் என்று கூறப்பட்டது.
இது இந்த ஆண்டிற்கான தமிழக அரசு பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டது. எனவே, ஒவ்வொரு வருடமும் சிவில் சர்வீசஸ் படிக்கும் ஆயிரம் மாணவர்கள் மதிப்பீட்டின் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும், முதல் கட்ட தேர்வுகளுக்காக பத்து மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு மாணவருக்கும் ரூபாய் 7,500 வழங்கப்பட இருக்கிறது. சில ஆண்டுகளாக இந்த யுபிஎஸ்சி தேர்வில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இதன்படி, யுபிஎஸ்சி தேர்வின் முதல் நிலை கட்ட தேர்வின் ஊக்கத்தொகைக்கான மதிப்பீடு தேர்வு வருகின்ற செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வின் மூலமாக ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பத்து மாதங்களுக்கு ரூபாய் 7,500 வழங்கப்பட இருக்கிறது. மேலும் இந்த மதிப்பீட்டுத் தொகையை எழுத விருப்பம் உள்ள மாணவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
இதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க இறுதி தேதி வருகின்ற ஆகஸ்ட் 17 என்றும் அறிவிப்பில் வெளியாகி உள்ளது.