ஓடி ஒளியும் கொரோனா தொற்று! கொரோனாவை கைது செய்யும் களப்பணியாளர்கள்!

ஓடி ஒளியும் கொரோனா தொற்று! கொரோனாவை கைது செய்யும் களப்பணியாளர்கள்!

ஓராண்டு காலமாக மக்கள் இந்த கொரோன தொற்றுடன் போராடி தான் வருகின்றனர்.இந்த தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டும் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.அதனைத்தொடர்ந்து மத்திய அரசும் மாநில அரசுகளும் கலந்தோசித்து இன்று தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வெளியிட்டுள்ளனர்.அதில் அவர்கள் கூறியதாவது,

பேருந்தில் 50 சதவீதம் மட்டுமே மக்கள் பயணிக்க அனுமதி அளித்துள்ளனர்.

அதேபோல திரையரங்குகளில் 50% மட்டுமே படம் பார்க்க அனுமதிக்குமாறு தெரிவித்துள்ளனர்.

சந்தைகளின் அருகிலிருக்கும் சிறு அங்காடி கடைகள் வைக்க தடை விதித்துள்ளனர்.

வெளி மாநிலங்களிலிருந்து வரும் நபர்கள் கண்டிப்பாக இபாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

பூங்காக்கள்,கேளிக்கை விடுதிகள் என அனைத்து இடங்களிலும் 50% சதவீதம் மட்டுமே அனுமதி.

ஆட்டோக்க்களில் ஓட்டுனர் தவிர 2 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி.

அதேபோல வாடகை கார்களில் செல்பவர்கள் கார் ஓட்டுனரை தவிர 3 பேர் மட்டுமே பயனம் செய்ய அனுமதி.

விளையாட்டு அரங்கங்கள்,மைதானங்கள் என அனைத்து இடங்களிலும் பார்வையாளர்களுக்கு தடை விதித்துள்ளனர்.

கொரோனா பரிசோதனை எடுத்த பிறகு படப்பிடிப்பு நடத்த அனுமதி.

தேநீர் கடைகளில் 50% பேர் மட்டுமே அனுமதி.

திருமணங்களில் 100 பேர் மற்றும் இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே கலந்துக்கொள்ள அனுமதி.

திருவிழாக்கள் நடத்த அனுமதி மறுத்துள்ளனர்.

தொழிற்சாலைகளில் வழிகாட்டு நெறிமுறைகளை கடிக்க வேண்டும்.மேலும் கொரோனா தடுப்பூசி போட அத்தொழிற்சாலை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு வீடு வீடாக சென்றும் வீட்டிலுள்ள அனைவருக்கும் காய்ச்சல்,சளி,இருமல் இருக்கிறதா என பரிசோதனைகளை செய்ய 12000 க்கும் மேற்பட்ட களப்பணியாளர்களை நியமித்துள்ளனர்.அதில் முதன் முதலாக இந்த கண்கானிப்பானது சென்னையில் தொடரப்பட்டுள்ளது.அந்தவகையில் 30 க்கும் மேற்பட்ட காய்ச்சல் பரிசோதனைக் கூடம் இதுவரை போடப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி காய்ச்சல்,சளி தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும்.அப்படி பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அவர்களை மருத்துமனையில் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment