குஷ்புவின் வெற்றியில் அதிக அக்கறை செலுத்திய உள்துறை அமைச்சர்! வெற்றி வாகை சூடுவாரா குஷ்பூ?

0
73

குஷ்புவின் வெற்றியில் அதிக அக்கறை செலுத்திய உள்துறை அமைச்சர்! வெற்றி வாகை சூடுவாரா குஷ்பூ?

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் தமிழக மக்களால் கவனிக்கப்பட்ட வேட்பாளர்கள் ஒரு சிலர்தான். அந்த பட்டியலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அதேபோல பாஜகவை சார்ந்த முருகன் மற்றும் குஷ்பு மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மக்களாலும் கவனிக்கப்பட்டு வந்தார்கள்.

இதில் குஷ்புவை பொருத்தவரையில் முதலில் திமுகவில் இருந்து அதன்பிறகு காங்கிரஸ் கட்சிக்கு மாறி அண்மையில் பாஜகவிற்கு வந்து சேர்ந்தார். அவர் கட்சியில் இணைந்த உடனேயே சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியின் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். அதிலிருந்து அந்த தொகுதியில் பல்வேறு இடங்களில் பரப்புரையும் மேற்கொண்டார் அதேபோல் அதிமுகவை மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்த தொகுதியில் பலம் வாய்ந்த கட்சியான திமுகவை நேரிடையாக அதேசமயம் துணிச்சலாக விமர்சனம் செய்யும் ஒருவர் அந்த கட்சியில் இருப்பது பாஜகவின் பலமாகவே பார்க்கப்பட்டது.இதனால் தேர்தல் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே குஷ்பூ சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தான் போட்டியிடுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியானது. ஆனால் அதிமுக கூட்டணியில் அந்த தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது.இதனால் குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவார் என கட்சித்தலைமை அறிவித்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எப்படியாவது ஆயிரம் விளக்கு சட்டசபைத் தொகுதியில் குஷ்புவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்ட மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி அவர்களும் குஷ்பு வெற்றி பெறுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ன தேவை என்று தமிழகத்திலேயே தங்கி கட்சியினரை ஆலோசனை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.இந்த நிலையில்தான் குஷ்பூ போட்டியிடும் ஆயிரம்விளக்கு சட்டசபைத் தொகுதியில் 500 ரூபாய் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

குஷ்புவை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆர்வம் காட்டி அதன் காரணமாக அந்த தொகுதியில் தாராளமாக பணம் செலவழிக்கப்பட்டது. திமுக சார்பாக அந்த தொகுதியில் 350 ரூபாய் கொடுத்ததாக தகவல்கள் கிடைத்திருந்தன. இந்த நிலையில் பாஜக சார்பாக ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்தது மட்டுமல்லாமல் வாக்குச்சாவடி செலவுகளுக்கும் மிக தாராளமாக பணம் செலவழிக்க வைத்திருக்கிறது. இதன் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் கடுமையான போட்டி இருந்து வருகிறது. அதேசமயம் திமுக பாஜக என்று இரண்டு கட்சியை சார்ந்தவர்கள் தேர்தலின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.