மணல் எழுத்தால் மீட்கப்பட்ட மாலுமிகள்

Photo of author

By Parthipan K

மணல் எழுத்தால் மீட்கப்பட்ட மாலுமிகள்

Parthipan K

மக்கள் நடமாட்டம் இல்லாத மைக்லாட் என்ற சிறிய தீவில் மூன்று மாலுமிகள் கரை ஒதுங்கினார்கள். இவர்கள் புலாப் அட்டோல்ஸ் தீவுக்கு புலாவத்தில் இருந்து வந்தவர்கள் இவர்கள் படகுகளில் சென்று கொண்டுயிருந்த போது எரிபொருள்கள் தீர்ந்துவிட்டதால் இந்த தீவில் கரை ஒதுங்கினர். அந்த தீவில் உள்ள மணலில் ‘SOS’ என ராட்சத வடிவில் எழுதினர் பின்பு காப்பாற்ற  யாராவது வருவார்களா என எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். கடந்த வியாழக்கிழமை அவர்கள் காணாமல் போனார்கள். புலாப் தீவுக்கு செல்லாதது அறிந்து அமெரிக்க அதிகாரிகள், ஆஸ்திரேலியா அதிகாரிகளுடன் சேர்ந்து தேட ஆரம்பித்தனர்.
திங்கட்கிழமை வரை யாரும் அவர்களை கண்டுபிடிக்கவில்லை. இதனால் சோர்வடைந்து மூன்று பேரும் மயங்கும் நிலை ஏற்பட்டது. உடனடியாக அருகே இருந்த ஆஸ்திரேலியாவின் கப்பற்படை விமானத்தை தொடர்பு கொண்ட அந்த தீவில் இறங்கு தேடும்படி கேட்டுக்கொண்டனர். அவர்களும் அந்த தீவில் இறங்கி பார்க்கும்போது அந்த மூன்று பேரும் அங்கு இருந்ததை கண்டுபிடித்து, அவர்களை காப்பாற்றியுள்ளனர். நாம் கடற்கரையில் வேடிக்கையாக மணலில் எழுதி விளையாடுவோம். அந்த வகையில் எழுதிய எழுத்து மூன்று பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது.