சேலம்,நாமக்கல் மாவட்டங்களில் இந்த இரு நாட்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை !! வானிலை ஆய்வு மையம் தகவல்!..

Photo of author

By Parthipan K

சேலம்,நாமக்கல் மாவட்டங்களில் இந்த இரு நாட்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை !! வானிலை ஆய்வு மையம் தகவல்!..

 

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிக அதிக கன மழை பெய்து வருகிறது.இதனால் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.அதன் தொடர்ச்சியாக நீர் நிலைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சில மாவட்டங்களில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் சில மாவட்டங்களில் தண்ணீர் வீட்டுக்குள் புகுந்து நாசமாகின்றது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டங்களில் நாளை மற்றும் வருகின்ற இரண்டாம் தேதியும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல் குறிப்பில் சேலம் நாமக்கல் மாவட்டங்களில் இன்று மற்றும் இரண்டாம் தேதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.