சனி பெயர்ச்சி கடக ராசிக்காரர்களே! பயன்கள் மற்றும் பரிகாரங்கள்!

0
108

 

சனி பெயர்ச்சி கடக ராசிக்காரர்களே! பயன்கள் மற்றும் பரிகாரங்கள்!

27.12.2020 முதல் 19.12.2023 வரைகடல் அலைகளை போல் மற்றவர்களிடம் அன்பு, பாசத்தை அள்ளிக்கொடுக்கும் கடக ராசி நேயர்களே.

சனியின் நாமம் : கண்டக சனி மற்றும் சனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைபாக்கிய ஸ்தானம்ராசிசுக ஸ்தானம் உங்கள் ராசிக்கு 6ஆம் இடமான ரண ருண ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் உங்களின் ராசிக்கு 7ஆம் இடமான களத்திர ஸ்தானத்திற்கு சென்றார். சனிபகவான் தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக ஜென்ம ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும் பார்க்கின்றார்.  மேலும் தாயாருடன் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும். இறைவழிபாடு தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். மேலும் நெருக்கமானவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வசதிக்கேற்ப வீடு கட்டும் பணியை துவங்குவது உத்தமம்.

சனி பெயர்ச்சி மாணவர்களுக்கு : அடிப்படைக்கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்களை பெறுவீர்கள். உயர்கல்வி படிப்பவர்களுக்கு படிப்பில் மந்தத்தன்மை உண்டாகும். மாணவர்கள் தங்களது பாடத்தை ஒருமுறைக்கு பலமுறை படிப்பதன் மூலம் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டவர்கள் வெற்றி பெறுவீர்கள். உடல் சோர்வினால் திட்டமிட்ட காரியங்களில் காலதாமதம் ஏற்படலாம். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் கவனக் குறைவினால் அவப்பெயர்கள் தோன்றி மறையும். கல்விக்கடன் தொடர்பான அலைச்சல்கள் அதிகரித்தாலும், சாதகமான முடிவுகள் கிடைக்கும். வாகனப் பயணங்களில் சற்று நிதானம் வேண்டும்.

சனி பெயர்ச்சி பெண்களுக்கு : திருமணம் தள்ளிப்போன பெண்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சிக்கு பின்னர் திருமண பாக்கியம் கைகூடும். தாய், தந்தையின் ஆரோக்கியத்தை கவனிப்பது அவசியம். சம வயது பெண்களுடன் இணைந்து தொழில் செய்ய விரும்புபவர்கள் தங்களது முயற்சியை மேற்கொள்ளலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கி சுபம் உண்டாகும். மனதில் தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நன்மையை அளிக்கும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி உண்டாகும். மேலும் சக ஊழியர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் தெரிவிப்பதை தவிர்க்கவும். ஆடை, ஆபரண சேர்க்கையால் மனமகிழ்ச்சி உண்டாகும்.

சனி பெயர்ச்சி உத்தியோகஸ்தரர்களுக்கு : இதுவரை தற்காலிக பணியில் இருந்து வந்தவர்களுக்கு நிரந்தரமாக வேலை கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் வங்கி கடன் உதவிகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் செயல்பாடுகளில் அவர்களின் அனுமதியின்றி தலையிடக்கூடாது. நண்பர்களின் மூலம் கிடைக்கும் அறிமுகத்தால் வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும்.

வழிபாடு முறை : அஷ்டமி தோறும் விரதமிருந்து பைரவர் வழிபாடு மேற்கொள்வது குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழலை உண்டாகும்.

 

author avatar
Parthipan K