சாமி பக்தியுடன் பணத்தை திருடிய அதிசய திருடன்!! இணையத்தில் வேகமாக பரவி வரும் வேடிக்கையான வீடியோ!!

0
160
Sami is a miraculous thief who stole money with devotion!! Funny video that is spreading fast on the internet!!
Sami is a miraculous thief who stole money with devotion!! Funny video that is spreading fast on the internet!!

சாமி பக்தியுடன் பணத்தை திருடிய அதிசய திருடன்!! இணையத்தில் வேகமாக பரவி வரும் வேடிக்கையான வீடியோ!!

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சாலையில் அருகிலுள்ள  சுங்கவார்சத்திரம் சந்தை அருகே கட்டுமானத்துக்கு தேவையான  அனைத்து பொருள்கள் விற்கும் கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் ராஜ்குமார் என்பவர் ஆவர் .

இவர் வியாழக்கிழமை இரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார். அதற்கு அடுத்து வெள்ளிக்கிழமை காலை திறந்துள்ளார். அப்போது கடையில் வைத்திருந்த பணம் திருட்டுப்போயிருந்ததைக்  கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் இது பற்றி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினார். முதலில் கடைக்கு சென்று சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தனர். அந்த சிசிடிவி காட்சியில் ஒருவர் வெள்ளை சட்டை அணிந்துக்கொண்டு கடைக்குள் நுழைவது பதிவாகி இருந்தது.

அந்த பதிவில் திருடன் முதலில் கல்லாப்பெட்டியை திறந்துள்ளான். அந்த பெட்டியில் சாமி படம் வைக்கப்பட்டு இருந்தது அதனை பார்த்தவுடன் திருடன் சாமி  படத்தை தொட்டு கும்பிட்டு விட்டு அதன்பின் பணத்தை எடுத்துள்ளான்.

இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதனை பார்த்த போலீசார் அந்த பக்தியுடன் பணத்தை திருடிய அதிசய திருடனை தேடி வருகிறார்கள். இந்த வினோத திருட்டு வீடியோ இணையத்தில்  பரவிவருகிறது.

 

author avatar
Jeevitha