இந்திய சந்தையில் சாம்சங் கேலக்சி M04 விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது, இந்த புதியரக ஸ்மார்ட்போன் முன்பக்கத்தில் 6.5-இன்ச் ஹெச்டி+ டிஸ்ப்ளேவுடன் வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச்-ஐ கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஃபிசிக்கல் மற்றும் விர்ச்சுவல் மெமரி மூலம் 8ஜிபி வரை ரேம் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்சி M04 ஸ்மார்ட்போனானது 1 டிபி வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டை கொண்டிருப்பதோடு, 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டிருக்கிறது மற்றும் இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ P35 SoC மற்றும் 5,000எம்ஏஹெச் பேட்டரி மூலம் இயங்குகிறது.
4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்ட இந்த சாம்சங் கேலக்சி M04 ஸ்மார்ட்போனானது சந்தையில் ரூ. 8,499க்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் ஷாப்பிங் தளத்தின் மூலம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு டிசம்பர் 16 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரவிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கு நீலம், தங்கம், மின்ட் பச்சை மற்றும் வெள்ளை போன்ற பல நிறங்களில் கிடைக்கப்பெறுகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இரட்டை கேமரா மற்றும் எல்இடி ஃபிளாஷ் லைட் உள்ளது, இது 13 மெகாபிக்சல் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. கூடுதலாக இந்த ஸ்மார்ட்போனில் வாடிக்கையாளர்களுக்கு ரேம் பிளஸ் அம்சம் கிடைக்கிறது.