M.A படித்தவர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை..உடனே விண்ணப்பியுங்கள் !

0
125

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் காலியாகவுள்ள பணியிடங்களில் தகுதியான நபர்களை பணியமர்த்த வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது.

1) நிறுவனம்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி)

2) காலி பணியிடங்கள்:

மொத்தம் 24 பணியிடங்கள் உள்ளது.

3) பணிகள்:

Assistant Professor of Psychology-cum-Clinical Psychologist

4) வயது வரம்பு:

SCs, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s, BCMs ஆகிய பிரிவை சார்ந்தவர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு வயது வரம்பு கிடையாது. மற்ற பிரிவை சார்ந்தவர்களுக்கு பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 37 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5) கல்வித்தகுதி:

M.A அல்லது B.A (Hons) அல்லது B.Sc (Hons) பிரிவில் படித்து முடித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். உளவியல் அல்லது முதுகலை டிப்ளமோ அல்லது மருத்துவ உளவியலில் போன்ற பிரிவுகளில் படித்து முடித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் சமூக உளவியலில் முதுகலை டிப்ளமோ அல்லது மருத்துவம் மற்றும் சமூக உளவியல் பிரிவில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

6) தேர்வு செய்யப்படும் முறை:

கணினி வழித்தேர்வு மற்றும் வாய்வழித்தேர்வு மூலம் தகுதியான நண்பர்கள் உதவி பேராசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

7) சம்பளம்:

உதவி பேராசிரியர் பண்ணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8) தேர்வு கட்டணம்:

பதிவு கட்டணம் ரூ.150 மற்றும் தேர்வு கட்டணம் ரூ.200 சேர்த்து மொத்தமாக ரூ.350 கட்டணமாக செலுத்த வேண்டும்.

9) விண்ணப்பிக்கும் முறை:

உதவி பேராசிரியர் பண்ணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரரர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

10) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

14.12.2022

author avatar
Savitha