புதுத்தோற்றத்தில் நடிக்கும் – சமுத்திரக்கனி
தெலுங்கில் வெங்கிமாமா என்ற படத்தை இயக்கிய சிவபிரசாத் யானாலா தற்போது தமிழ் அறிமுகமாக உள்ளார்.
தமிழில் இவர் இயக்க இருக்கும் விமானம் என்ற திரைப்படத்தில் “நடிகர் சமுத்திரக்கனி, நடிகை மீரா ஜாஸ்மீன்” நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இயக்குனர் சிவபிரசாத் யானாலா- விடம் பேசிய போது விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும்.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிடப்படும்.
இதன் கதை சுருக்கம் : விமானநிலையம் அருகே வசிக்கும் ஏழ்மையான குடும்பம். தந்தை, மகன் தினமும் விமானம் தரை ஏறுவது, இறங்குவதை பார்த்துக் கொண்டே நிற்பார்கள்.
ஒரு நாள் தந்தையிடம் “அப்பா நான் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும்” என்று மகன் கேட்க, நீ பெரியவன் ஆனவுடன் அப்பா அழைத்து செல்கிறேன்.
என இருவரும் பேச, ஒரு நாள் மகன். “அப்பா நான் வளரும் வரை என்னால் காத்திருக்க முடியாது” என்னை சீக்கிரம் விமானத்தில் அழைத்து செல்லுங்கள் என்று அடம் பிடிக்கிறான்.
அதற்கு அவன் அப்பா நான் கூட விமானத்தில் சென்றதில்லை. இந்த காலை வைத்து கொண்டு என்னால் எப்படி செல்லமுடியும் என்று வருத்ததுடன் கூறுகிறார்.
மகன் கனவை அப்பா நிறைவேற்றுவரா? அப்பா கனவை மகன் நிறை வேற்றுவானா? என்பதே கதையின் முடிவு. என இயக்குனர் சிவபிரசாத் யானாலா பேசினார்.