சசிகலா தினகரன் திடீர் மோதல்! அதிமுகவினர் கொண்டாட்டம்!

சசிகலாவுக்கு எதிராக தினகரன் தெரிவித்த கருத்து அவருடைய உண்மை முகத்தை காட்டிக் கொடுத்து விட்டது என்று குற்றம் சாட்டும் அவருடைய கட்சி நிர்வாகிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய தயாராகி வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை சசிகலா வழங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் சசிகலாவுடன் பங்குபெற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் சரஸ்வதி, தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் முனுசாமி மற்றும் தியாகராய நகர் வைத்தியநாதன், உள்ளிட்டவர்களை தினகரன் புறக்கணிக்கிறார். இந்த நடவடிக்கை சசிகலாவுக்கு பிடிக்கவில்லையாம். இதன் காரணமாக, அவர்களுக்கு இடையில் அதிகார மோதல் ஏற்பட்டு இருக்கிறது. அண்மையில் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா உரிமை கொண்டாடுகிறார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் பங்கேற்பது சட்ட சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் சசிகலாவுடன் செல்வதை எங்கள் நிர்வாகிகள் தவிர்த்து இருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார். தினகரனின் இந்த பேட்டி சசிகலாவுக்கும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகளுக்கும், அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் தெரிவித்ததாவது வெள்ள நிவாரண உதவி செய்வதற்கு தினகரன் வருகை தரவில்லை சசிகலா உதவிகளை செய்தார் அவருக்கு உதவியாக சென்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளிடம் தினகரன் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டது என்று தெரிகிறது சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட கூடாது என்று உத்தரவிட்டது எங்களால் ஜீரணிக்க முடியவில்லை என்று அந்தக் கட்சியின் நிர்வாகிகள் ஆதங்கப்படுகிறார்களாம்.

ஆகவே இனிமேல் தினகரனை நம்பி இருந்தால் நாங்கள் நட்டாற்றில் தள்ளப்படுவோம் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி ஜெயலலிதா நினைவு நாள் அன்று காலை 10 மணி அளவில் தினகரனும், 11 மணி அளவில் சசிகலாவும், தனித்தனியே அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள். அதன் பிறகு மாநில, மாவட்ட, நிர்வாகிகள் சசிகலாவுக்கு ஆதரவாக தங்களுடைய பதவிகளை இராஜினாமா செய்யத் திட்டமிட்டு இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

வெள்ள நிவாரண உதவியை சசிகலா வழங்கிய நிகழ்ச்சியில் பங்குபெற்ற தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் முனுசாமிக்கு தகவல் தெரிவிக்காமல் மண்டல பொறுப்பாளர்களை வைத்து சோழிங்கநல்லூர், வேளச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்களை விநியோகம் செய்திருக்கிறார் டிடிவி தினகரன்.

தியாகராய நகர், விருகம்பாக்கம், உள்ளிட்ட தொகுதிகளில் ஜெயலலிதா ஆசியுடனும், சசிகலா நல்லாசியுடன் தினகரன் உத்தரவுக்கு இணங்க விருப்பமனு தாக்கல் செய்யப்படுகிறது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமையிலிருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. தேர்தலுக்கு மட்டும் சசிகலா நல்லாசியுடன் என்று குறிப்பிடுவது அதிமுக பொதுச்செயலாளர் உரிமை வழக்கு சட்ட சிக்கலை ஏற்படுத்தாதா என்று சசிகலாவின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகிறார்களாம்.

Leave a Comment