மாநிலத்தில் மீண்டும் தளங்களுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி வரை நீட்டிப்பு! முதலமைச்சர் உத்தரவு!

0
83

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவியதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது அதிலிருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்றின் அளவை பொருத்து ஊரடங்கு உத்தரவு தளர்வு அளிக்கப்பட்டு வந்தன, ஆனாலும் ஊரடங்கு உத்தரவு இந்த நாள் வரையில் பல்வேறு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

சென்ற மே மாதத்தில் தினசரி நோய்த்தொற்று அளவு முப்பத்தி ஆறு ஆயிரம் என்ற சூழ்நிலையில் இருந்து வந்தது, ஆனால் தற்சமயம் 720 என்ற அளவிற்கு குறைந்து இருக்கிறது ஆகவே கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகின்றது என்ற சூழ்நிலையில், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு 30ம் தேதி நேற்றுடன் முடிவடைந்தது.

இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் நோய்த்தொற்று பரவலை கட்டுப் படுத்தும் விதத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் ஆணையின் அடிப்படையில் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகின்றது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியிட்ட கடிதத்தில் நோய்த்தொற்று தடுப்பு கட்டுப்பாடுகள் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர் மழை பெய்து வருகின்ற காரணத்தினால், பொதுமக்கள் நலன் கருதி நடைமுறையில் இருக்கின்ற ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்படுகிறது என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

முன்னரே ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையே பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருக்கிறது அதேபோன்று கேரள மாநிலத்திற்கும் பொது போக்குவரத்து அனுமதிக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் செயல்பட அனுமதிக்கப்பட்டு இருக்கின்ற அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூட கூடிய பகுதிகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும், அதன் அடிப்படையில் கடைகளின் நுழைவாயிலில் வாடிக்கையாளர்கள் பயன் படுத்தும் விதத்தில் சுத்திகரிப்பான் கட்டாயமாக வைப்பதுடன் உடல் வெப்பம் பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயமாக முகக் கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதத்தில் ஒரே சமயத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது. கடைகளின் நுழைவாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது ஒரு நபருக்கும், இன்னொரு நபருக்கும், இடையே போதுமான இடைவெளி இருக்கும் விதத்தில் குறியீடுகள் போட வேண்டும் என்றும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் உடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தால், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடத்தல், உள்ளிட்ட கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் இருக்கின்ற பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு மண்டலம் இவைகளை நுண்ணறிவு வரையில் வரையறை செய்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளின் படி தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்டவை முன்னெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

வரையறுக்கப்பட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஒரு சில நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நிச்சயமாக பின்பற்றப்பட வேண்டும், அதன் அடிப்படையில் அந்த பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கவேண்டும். மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல், தவிர மற்ற செயல்பாடுகளுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிரமாக நோய்த்தொற்று வரவில்லை வீடுவீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும். நோய்த்தொற்று உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வீட்டிலிருந்து வெளியே வருவதையும், கூட்டம் கூடுவதையும், தவிர்க்க வேண்டும்.

நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் அதோடு தடுப்பூசி சலித்துக் கொண்டாலும் கூட நோய்த்தொற்றுகள் மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்ட படி பொது இடங்களில் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு அல்லது சனிடைசர் கொண்டு சுத்தம் செய்வது, உள்ளிட்டவற்றை கட்டாயமாக பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக அருகில் இருக்கின்ற மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை சிகிச்சை பெறவும் வேண்டும் என்று பொதுமக்களுக்கு இந்த செய்தி குறிப்பின் மூலமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருக்கிறார்.