வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறையில் செல்வதற்கு கஸ்டமர் போடும் நிலைக்கு நாங்கள் முன்பு அதிமுக எனும் மிகப்பெரிய இயக்கமும் தமிழ்நாட்டின் ஆட்சியின் சசிகலா வசம் இருந்து வந்தது. முதலில் ஆட்சி கையை விட்டு போனது அதன் பிறகு கட்சியின் அவர் கைவிட்டு போய்விட்டது. ஆனாலும் அவர் மறுபடியும் தமிழகம் திரும்பிய பின்னர் ஆட்சியை கைப்பற்ற இயலவில்லை. ஆனாலும் கட்சியை கைபற்றி விடலாம் என்ற நினைப்பில் சசிகலா காய் நகர்த்தி வந்தார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் அவர் செய்திருந்தார். ஆனாலும் அவர் செய்த காய்நகர்த்தல்கள் எல்லாம் வீணாகி போனது .அதோடு எதிர்பார்த்த முடிவும் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. சசிகலா தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்னர் ஆங்காங்கே அவருக்கு ஆதரவாக அதிமுக பிரமுகர்கள் சுவரொட்டிகள் வைத்திருந்தார்கள்.
இருந்தாலும் சசிகலா தமிழகம் திரும்பிய பின்னர் இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டி அவர்கள் மாயமாக மறைந்து போயினர். இதற்கு காரணம் சசிகலாவிற்கு அதிமுகவினர் இடையில் எந்தவிதமான எதிர்பார்ப்பும் கிடையாது என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதோடு சசிகலாவுடன் தொடர்பில் இருப்பவரை எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் அதிமுக மேலிடம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்து வருகின்றது ஆகவே சசிகலாவை நம்பி அரசியல் வாழ்வில் எந்த ஒரு முடிவையும் எடுக்க யாரும் தயாராக இல்லை என்று கூறப்படுகின்றது. சசிகலா சிறையில் இருந்து வந்த பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செயல்பாடுகளில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது. சசிகலாவிற்கு எதிராக அவர் எதுவும் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
ஆனாலும் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் போது டிடிவி தினகரன் அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான விமர்சனத்தை பேசுகின்றார் .இதனை தொடர்ந்து அடுத்த கட்ட பிரச்சாரத்தில் சசிகலாவிற்கு எதிராகவும் ஒரு சில கருத்துக்களை எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்க கூடும் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அரசியல் அதிமுகவினரை அனைவரையும் யோசிக்கும் நிலைக்கு தள்ளியிருக்கிறது. அதோடு எடப்பாடி பழனிச்சாமியின் வேண்டுகோளை ஏற்று கொண்டு தான் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்து சென்றதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களே தெரிவித்திருக்கின்றார். இதன் வழியாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான உறவு பலமாக இருப்பதாக தெரிகின்றது. இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி மற்றும் கட்சி கூட்டணி என்று எல்லாவற்றையும் சிறப்பாக செயல்படுத்தி வருவது அதிமுகவினரை யோசிக்க வைத்திருக்கிறது.
ஆகவே தற்சமயம் சசிகலாவை சந்தித்து தேவையில்லாத விருப்பத்தை கட்சிக்குள் உண்டாக்க வேண்டாம் என்று கட்சியில் இருக்கும் அனைவரும் யோசித்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2 தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது கட்சி உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீத இடங்களை வெற்றி பெற்றிருக்கிறது. இது போன்ற நிகழ்வுகளால் கட்சியை சார்ந்த அனைவரும் மேலிடத்தால் அவ்வப்போது அடுத்த கட்டத்துக்கான ஆலோசனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அதே நேரம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வாக்கு வங்கி போன்றவை தொடர்பாக அதிமுகவினர் தெரிந்து வைத்திருக்கிறார்கள் . இப்படி எல்லாவற்றையுமே எடப்பாடிக்கு சாதகமாக திருப்பியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்று சொல்கிறார்கள்.
ஆகவே அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்து முடிவு செய்து கொள்ளலாம் என்ற நிலைக்கு சசிகலா சென்று விட்டதாக சொல்கிறார்கள். அதிமுகவை கைப்பற்றுவதற்கு அந்த கட்சியின் நிர்வாகிகள் உடைய ஆதரவு இல்லாமல் நாம் எந்தவித முயற்சியும் செய்வது வீண் என்று சசிகலா நினைப்பதாக தெரிவிக்கிறார்கள். ஆகவே இப்பொழுது அரசியல் ரீதியான ஒரு சில செயல்பாடுகளை ஓரமாக வைத்துவிட்டு அவருடைய தனிப்பட்ட செயல்களில் சசிகலா தன்னுடைய கவனத்தை செலுத்த இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். அதோடு அவர் தஞ்சை மாவட்டத்திற்கு செல்ல இருப்பது அவருடைய தனிப்பட்ட பயணமாக தான் இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.