தொண்டர்கள் விருப்பம் தான் என் சந்தோஷம்! சசிகலா பளிச்!

Photo of author

By Sakthi

சசிகலா நாள்தோறும் தொண்டர்களுடன் தொலைபேசியில் உரையாடி வருகின்றார் என்று சொல்லப்படுகிறது. அவர் உரையாற்றிய ஆடியோ பதிவுகளில் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி வருகின்றது.அந்த விதத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ரூபம் வேலன் என்ற தொண்டரிடம் சசிகலா உரையாற்றியிருக்கிறார். அதில் உங்களுடைய பிறந்த நாளில் உங்களை சந்திக்க நினைத்தோம் முடியவில்லை அம்மா என்று தெரிவித்திருக்கிறார்.

அவருக்கு சசிகலா தற்சமயம் நோய் தொற்று காலம் என்பதால் உங்களுடைய பகுதியிலேயே ஏதாவது உதவி செய்யுங்கள், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உதவி புரியுங்கள், எனக்காக மட்டும் அல்ல அனைத்து மக்களுக்காகவும் கடவுளை இளைஞர்கள் அதுவே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எனக்கு துணையாக தொண்டர்களை தான் விட்டுச் சென்றிருக்கிறார். ஆகவே அனைத்தும் நல்லதாகவே நடக்கும். இதுவரையில் என்னுடைய பிறந்தநாளை அம்மாவுடன் தான் கொண்டு இருக்கின்றேன், ஆகவேதான் இப்போதெல்லாம் பிறந்த நாளை கொண்டாடுவது இல்லை ஆகவே என்னுடைய பிறந்த நாளை கொண்டாட விருப்பம் கொண்ட தொண்டர்கள் ஏழை மக்களுக்கு உதவிகளை செய்து கொண்டாடுங்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

இப்போது இருக்கின்ற சூழ்நிலையில், அரசு விதித்திருக்கும் ஊரடங்கு உத்தரவை அனைவரும் மதித்து நடக்க வேண்டும், நோய் தொற்று பாதிப்பு குறைந்து பொது மக்கள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு திரும்ப வேண்டும், அப்போதுதான் நன்றாக இருக்கும் அதுதான் எனக்கு முக்கியம் நோய் தொற்று பாதிப்பு குறைந்த உடன் தொண்டர்களை சந்திக்க நான் வருகை தருவேன் அதிமுகவின் மூன்றாவது தலைமுறை தலைவராக நான் வரவேண்டும் என்பதில் விருப்பம்கொண்ட தொண்டர்களின் விருப்பமே என்னுடைய சந்தோஷம் என்று சசிகலா பேசியிருக்கின்றார்.