காலையில் அதிரடி: விஜய்யுடன் இணைகிறாரா சசிகலா.. கூட்டணி குறித்து வெளியான “முக்கிய தகவல்”..

TVK: அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அனைத்துமாக சசிகலா இருந்து வந்தார். எடப்பாடி எப்பொழுது முதல்வரானாரோ அப்போதையிலிருந்து சசிகலா மற்றும் அவரின் ஆதரவாளர்களை ஓரம் கட்ட ஆரம்பித்தார். இறுதியில் கட்சியை விட்டு நீக்கி விட்டார். டிடிவியுடன் கூட்டணியிலிருந்த சசிகலா அங்கிருந்தும் விலகி அதிமுகவை ஒன்றிணைக்க போகிறேன் என கூறினார். ஆனால் யாரும் கை கொடுப்பதாக தெரியவில்லை.

இதனால் சுயேட்சையாக நின்று போராடி விடலாம் என எண்ணி நேற்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் மாநாடு ஒன்று நடத்தி அதில் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார். அந்தக் கூட்டத்தில் பேசிய அனைத்து வார்த்தைகளும் எடப்பாடிக்கு எதிரானதாக தான் இருந்தது. மேற்கொண்டு அதிமுகவிலிருந்து வெளியேறிய செங்கோட்டையன் உள்ளிட்டோர் கஷ்ட காலங்களில் தனக்கு ஆதரவு குரல் கொடுத்ததாகவும் கூறினார்.

தற்போது புதிய கட்சி ஆரம்பித்தவர் யாருடன் கூட்டணி என்பதெல்லாம் அறிவிக்கவில்லை. ஆனால் செங்கோட்டையன் குறித்து பாசிட்டிவாக பேசியதை வைத்து, இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய அதிக வாய்ப்புள்ளதாம். அதிமுகவே எதிர்க்கும் விஜய்யுடன் கூட்டணி வைத்தால் தான் ஒரு தொகுதியிலாவது அவரால் வெற்றி பெற முடியும் என அவரை சுற்றியிருக்கும் நிர்வாகிகள் ஆலோசனை கூறி வருகிறார்களாம்.

இதுகுறித்து சசிகலா விஜய்யுடன் பேசி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த கட்சியை தவிர வேறு கட்சியில் இணைந்தால் வெகு விமர்சையான வரவேற்பு கிடைக்காது என்றும் கூறுகின்றனர்.