“தேர்தலுக்கு பின் கூட்டணி வேண்டாம்” யாருக்கும் அடிமை இல்லை”.. பாஜக தலையில் இடியை இறக்கிய எடப்பாடி”

0
32
After the election, the party can act according to the request, no alliance is needed - Edappadi Palaniswami!!
After the election, the party can act according to the request, no alliance is needed - Edappadi Palaniswami!!
ADMK BJP: சட்டமன்ற தேர்தல் மே மாதம் தொடங்க இருப்பதையொட்டி ஒவ்வொரு கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இம்முறை திமுக அதிமுக தவெக நாம் தமிழர் என்று நான்கு முனைப்போட்டி உள்ளது. இதில் திமுக மற்றும் அதிமுக தங்களின் தேர்தல் அறிக்கைகளை வெளியிட ஆரம்பித்து விட்டனர். அதேபோல தேமுதிக வழக்கத்திற்கு மாறாக இம்முறை திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது.
 
மேலும் அதிமுக வுடனும், பாஜக பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளனர். இதில் பாஜகவை சேர்ந்தவர்கள் மட்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும் என கூறாமல், பாஜக ஆளும் என கூறி வருகின்றனர். ஒரு படி மேலாக அமித்ஷா கூட்டணி முறையில் ஆட்சி என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் அதிமுக இதற்கு முழு எதிர்ப்பை காட்டியுள்ளனர். இதனால் தேர்தல் கட்டமைப்பிற்காக ஆளும் கட்சியை எதிர்க்க தான் இந்த கூட்டணி என்று பலமுறை எடப்பாடி தெரிவித்துள்ளார். அந்த வகையில் நேற்று சென்னையில் நடந்த பிரச்சாரத்தில், திமுகவைப் போல யாரும் பத்தாண்டுகள் கூட்டணியில் அடிமையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இது வெறும் தேர்தலுக்கான கூட்டணி தான்.
 
தேர்தலுக்குப் பின் ஒவ்வொரு கட்சியும் தங்களின் கொள்கைக்கேற்ப செயல்படலாம் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் அதிமுக தேர்தல் முடிந்ததும் தங்களது கொள்கைக்கு ஏற்ப மாறுவதாக கூறி என்டிஏ கூட்டணியிலிருந்து வெளியேறி விடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Previous articleகாலையில் அதிரடி: விஜய்யுடன் இணைகிறாரா சசிகலா.. கூட்டணி குறித்து வெளியான “முக்கிய தகவல்”..
Next articleசீட்டை குறைக்கும் திமுக.. ஸ்டாலின் போட்ட குண்டு.. கூட்டணியில் வெடிக்கும் பூகம்பம்”.. “சிதறும் கூட்டணி கட்சிகள்”..