குடி போதை தலைக்கேறியதால் சைக்கோவாக மாறிய சைத்தான்!?

0
224
Satan became a psycho due to drunkenness!?
Satan became a psycho due to drunkenness!?

குடி போதை தலைக்கேறியதால் சைக்கோவாக மாறிய சைத்தான்!?

நெல்லை மாவட்டம் அம்மையடுத்த வீரனன் அருகே ரெட்டியார்புரம் பகுதியிலுள்ள தனியார் மாந்தோட்டம் ஒன்றுள்ளது. மாந்தோட்டத்தில் வேலைக்காக தென்காசி சேர்ந்த கருப்புசாமி மற்றும் ஞானமுத்து ஆகிய இரு தொழிலாளர்கள் வேலைக்கு வந்திருந்தனர்.

நேற்று இருவரும் மாங்காய் தோட்டத்தில் மாங்காய் பறித்துக் கொண்டிருந்தனர். இரவு நேரம் ஆகிவிட்டதால் இருவரும் தோட்டத்திலேயே தங்கி விடலாம் என்று தோட்டத்திலேயே தங்கினார்கள். அப்போது இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. மது அருந்தியதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

மேலும் இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டடுள்ளார்கள். பிறகு இருவரும் தனித்தனியே தூங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது மது போதையில் இருந்த ஞானமுத்து நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த கருப்புசாமியின் மீது மாந்தோப்பில் கிடந்த பெரிய பாரங்களை தூக்கி அவர் தலையில் போட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின் தலை நசுங்கிய நிலையில் கிடந்த கருப்புசாமியின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த வீரவநல்லூர் போலீசார் ஞானமுத்துவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous article‘சுயமரியாதை ரொம்ப முக்கியம்’… யாரை சொல்லுகிறார் ஜடேஜா?… ரசிகர்கள் குழப்பம்
Next articleகால்வாயில் உயிரிழந்த அழுகிய பன்றி? அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!!