சாத்தான்குளம் பிரச்சனையில் கைதான தலைமை காவலரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை!!

Photo of author

By Parthipan K

சாத்தான்குளம் பிரச்சனையில் கைதான தலைமை காவலரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை!!

Parthipan K

Madras High Court Madurai Bench

சாத்தான்குளம் வழக்கில் கைதான தலைமை காவலர் முருகன் ஜாமீன் கேட்டு மதுரையில் உள்ள முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை இன்று நீதிபதி தாண்வன் காணொளி காட்சி மூலம் விசாரித்தார்.

தொடக்க நிலை விசாரணை நடைப்பெற்று கொண்டிருப்பதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதாக கூறிய சிபிஐ தரப்பு வழக்கறிஞர்கள் முருகனின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி முருகனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.மேலும் காவலர்கள் முத்துராஜா, தாமஸ் பிரான்ஸிஸ் ஆகிய 2 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.