டெல்லி போராட்டத்தில் ஒருவர் கூட விவசாயிகளே இல்லை – மத்திய அமைச்சர்!

0
71
Not a single farmer in the Delhi struggle - Union Minister!
Not a single farmer in the Delhi struggle - Union Minister!

டெல்லி போராட்டத்தில் ஒருவர் கூட விவசாயிகளே இல்லை – மத்திய அமைச்சர்!

வேளாண் விளைபொருட்கள் வர்த்தகம் மற்றும் வணிகம் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாய ஒப்பந்த சட்டம் அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் உள்ளிட்ட 3 புதிய மசோதாக்கள் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக இயற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை அடுத்து தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தனர். இதனையடுத்து இன்று தொடங்கும் இந்த போராட்டம் ஆகஸ்ட் 9 வரை நடைபெறுகிறது என்றும் தெரிவித்தனர். தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரும் ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும்.

ஏற்கனவே இந்த சட்டங்கள் குறித்தும் விவாதித்தோம். சட்டத்திலுள்ள பாதகங்கள் குறித்து விவசாயிகள் விளக்குவார்கள் எனில் மத்திய அரசு அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறது. என போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் விவசாயிகளே அல்ல. வன்முறையாளர்கள் என வெளியுறவு விவகாரங்கள் மற்றும் பண்பாட்டு துறை மத்திய இணையமைச்சர் மீனாட்சி லேகி விமர்சித்துள்ளார். மேலும் இவர்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். என்றும் கடந்த ஜனவரி 26 ம் தேதி நடந்த வன்முறை சம்பவம் வெட்கக்கேடான சம்பவம் என்றும் கூறியுள்ளார். எதிர்கட்சிகள் இதை பெரிதுபடுத்துகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளிடம்  அரசு பேச்சுவார்த்தை நடத்த தயார் என அறிவித்திருந்த நிலையில் மத்திய இணை அமைச்சரின் இந்த விமர்சனம் மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.