சனி பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

0
281

சனி பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

27.12.2020 முதல் 19.12.2023 வரைசிகரத்தை தொட விரும்பும் சிம்ம ராசி அன்பர்களே.

சனியின் நாமம் : ரோக சனிசனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை10ம் பார்வைஅஷ்டம ஸ்தானம்போக ஸ்தானம்முயற்சி ஸ்தானம்உங்கள் ராசிக்கு 5ஆம் இடமான பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்போது உங்களின் ராசிக்கு ரண ருண ஸ்தானமான 6ஆம் இடத்தில் இருக்கிறார்.

சனி தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக அயன, சயன போக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக முயற்சி ஸ்தானத்தையும் பார்க்கின்றார். புதிய எண்ணங்களை செயல்படுத்தும்போது பெரியோர்களின் ஆலோசனைகள் கேட்டு முடிவு செய்யவும்.

தாங்கள் தொடங்கும் முயற்சியில் சற்று சோம்பேறித்தனத்தை தவிர்ப்பதன் மூலம் எடுத்த அனைத்து காரியங்களிலும் வெற்றி காண்பீர்கள். மூத்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு சிறப்பாக அமையும். மற்றவர்களுக்கு உதவும் பொருட்டு ஜாமீன் கையெழுத்து இடுவதை தவிர்க்கவும். வாழ்க்கை துணையிடம் மகிழ்ச்சியான உரையாடல்களை மேற்கொள்வதன் மூலம் குடும்பத்தில் அமைதியான போக்கை கடைப்பிடிக்க முடியும். எதிர்காலம் சார்ந்த சில முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். வீட்டுக்கடன் வாங்க நினைத்தவர்களுக்கு உடனடியாக கிடைக்க ஏற்பாடு ஆகும்.

சனி பெயர்ச்சி பெண்களுக்கு : இதுவரை திருமணத்தடை இருந்து வந்த பெண்களுக்கு விரைவில் திருமண யோகம் கைகூடும். இளைய சகோதரர்களிடம் சமரசப்போக்கை கடைப்பிடிக்கவும். சிறு, குறு தொழில் செய்பவர்கள் தங்களது வியாபாரத்தை புதுவகையான விளம்பர யுக்திகளை பயன்படுத்துவதன் மூலம் லாபம் அடைவீர்கள். ஆடம்பர ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களின் மனநிலையை அறிந்து செயல்படவேண்டிய காலமாகும். தம்பதியர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லவும். குழந்தைகளின் செயல்பாடுகள் மற்றும் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

சனி பெயர்ச்சி மாணவர்களுக்கு :உயர்கல்வி பயிலும் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். இவர்களின் தனித்திறமை வெளிப்படுவதற்கான சூழல் அமையும். தொழில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு அமையும். விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பாராட்டுகளையும் பரிசுகளையும் குவிப்பீர்கள். பிறமொழி பாடங்களை முதன்மையாக எடுத்துக் கொண்ட மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சனி பெயர்ச்சிஉத்தியோகஸ்தரர்களுக்கு :உத்தியோகஸ்தரர்களுக்கு மனதில் இருந்துவந்த பல குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பாதியில் நின்று கொண்டிருக்கும் பல வேலைகளை சிறப்பாக நிறைவேற்றி மகிழ்வீர்கள். பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு பதவி உயர்வுக்கான காலம் இது. தலைமை அதிகாரிகளால் சில அனுகூலமான சூழல் உண்டாகும். தற்காலிக ஊழியர்களுக்கு உத்தியோகத்தில் நிலை தன்மை ஏற்படும். பணிகளை திட்டமிட்டு செயல்படுத்தி எண்ணிய இலக்கை அடைவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சாதகமாக அமையும்.

வழிபாடு முறை :ஸ்ரீ வாஞ்சியம் சென்று சந்தோஷ சனிபகவானை தரிசித்து வர நன்மைகள் பெருகும்.

 

Previous articleஒன்பது ஆடிப்பூரமும்.. நாக சதுர்த்தியும் இணைந்த நன்னாளில்.. என்ன செய்தால் சிறப்பு?
Next articleமின் விசிறியின் இறகுகள் பின்பக்கமாக சுற்றுவதுபோல் தோன்ற காரணம் என்ன?பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்…!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here