சனிப்பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

0
212

சனிப்பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

27.12.2020 முதல் 19.12.2023 வரைவிடாப்பிடியுடனும், விழிப்புணர்வுடனும் செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே.சனியின் நாமம் : சகாய சனி சனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை 10ம் பார்வைபஞ்சம ஸ்தானம்பாக்கிய ஸ்தானம்போக ஸ்தானம்உங்கள் ராசிக்கு தன, குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்போது தங்களின் ராசிக்கு தைரிய, வீரிய ஸ்தானமான மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

மேலும் சனி தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக அயன சயன போக ஸ்தானத்தையும் பார்க்கின்றார். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். தன்னம்பிக்கையுடன் எதிலும் செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். மனதிற்கு பிடித்த மனை மற்றும் வீடு வாங்கி மகிழ்வீர்கள். புதிய பயணம் மூலம் மனமாற்றம் ஏற்படும். முயற்சிக்கேற்ப தனவரவும், அங்கீகாரமும் கிடைக்கும். சிறு அலைச்சல்கள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். மனதில் ஏற்படும் குழப்பங்களை மற்றவர்களிடம் பகிர்வதன் மூலம் மனதில் தெளிவு பிறக்கும்.

சனி பெயர்ச்சி பெண்களுக்கு : தந்தைவழி உறவினர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும். தொழிலில் இதுவரை இருந்துவந்த நிலை மாறி முன்னேற்றம் அடைவீர்கள். புத்திர பாக்கியத்தை எதிர்நோக்கி கொண்டிருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் தாமதப்பட்டு கைகூடும். இளைய சகோதர, சகோதரிகளின் ஒத்துழைப்பு பெரும் பங்கு வகிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும்.

சனி பெயர்ச்சி மாணவர்களுக்கு :அடிப்படை கல்வி பயிலும் மாணவர்கள் தங்களது கல்வியில் இதுவரை இருந்துவந்த நிலையில் மாற்றம் காண்பீர்கள். உடல் வலிமையை வெளிப்படுத்தும் போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம் வெற்றி காண்பீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் அடைவீர்கள். கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்கள் தங்களது படிப்பில் நாட்டத்தை அதிகப்படுத்தவும். நண்பர்களின் பழக்க வழக்கம் அறிந்து பழகுவது நன்மை அளிக்கும்.

சனி பெயர்ச்சி உத்தியோகஸ்தர்களுக்கு :விருப்பத்துடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். வேலையில் இதுவரை இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி சுபம் உண்டாகும். வேலை சார்ந்து வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போது அலைச்சல் ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு உண்டாகும். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். நெருக்கமானவர்களுக்காக மற்றவர்களின் பணிகளையும் சேர்ந்து பார்க்க நேரிடும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

வழிபாட்டு முறை:சதுர்த்தி அன்று விநாயகர் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

 

Previous articleகொத்தவரங்காயில் இத்தனை மகத்துவமா? மிஸ் பண்ணாம பாருங்க!
Next articleஇன்று இந்த ராசிக்காரர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள்!