வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 30க்குள் இது மிகவும் கட்டாயம்!! SBI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

Photo of author

By Jayachithra

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்பது நாட்டின் மிகப்பெரிய வங்கி ஆகும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்காக வாடிக்கையாளர்களை எச்சரித்து உள்ளது. மேலும், தங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைத்தால் மட்டுமே வங்கி வசதியை பயன்படுத்த வேண்டும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ‘வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 2021, 30 க்கு முன்னர் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்து உள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் இதனை செய்யாவிட்டால் அவர்களின் பான் அட்டை செல்லாது என்றும் அறிவிக்கப்படும்.

இது வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகளில் சிக்கலை ஏற்படுத்தக் கூடும் என்று எஸ்பிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது. இந்த பணியை வெறும் மூன்று வழிகள் மூலமாக வீட்டில் இருந்தபடியே செய்ய முடியும். இதற்காக நீங்கள் எங்கும் செல்ல தேவை இல்லை என்றும் கூறி இருக்கின்றது. இன்டர்நெட் இருந்தாலே போதும் சில நிமிடங்களில் உங்கள் ஆதார் உடன் இணைக்க முடியும்.

அதற்கு மூன்று வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதற்காக நீங்கள் வரித்துறையின் அதிகாரபூர்வ வலை தளமான https://www.incometaxindiaefiling.gov.in/home செல்ல வேண்டும். மேலும், இடது புறத்தில் உள்ள லிங்க் ஆதார் என்பதை கிளிக் செய்ய வேண்டும், புதிய இடைமுகம் திறந்தவுடன் அதில் உங்கள் ஆதார் மற்றும் பான் ஆதாரங்களை அதிலுள்ள பெயரை உள்ளிட வேண்டும்.

பின் பிறந்த வருடம் மற்றும் விருப்பத்தைத் தேர்வு செய்ய விரும்பினால் ‘எனக்கு ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு மட்டுமே உள்ளது’ என்பதை தேர்ந்து எடுக்க வேண்டும். அதற்கு பின் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு ஆதார் இணைப்பை கிளிக் செய்து முடித்தவுடன் உங்கள் முன் ஒரு உறுதிப்படுத்துதல் பக்கம் திறக்கப்படும். அதில் அட்டை ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கும். இதன் மூலமாக உங்கள் பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை இணைக்க முடியும்.