வேலை தேடுபவர்களை குறிவைக்கும் மோசடி கும்பல்!! லிங்க் ஐ தொட்டால் மொத்தமும் காலி!!

Photo of author

By CineDesk

வேலை தேடுபவர்களை குறிவைக்கும் மோசடி கும்பல்!! லிங்க் ஐ தொட்டால் மொத்தமும் காலி!!

தினமும் தொளைக்கட்சிகளிலும், ஊடங்களிலும் ஏராளமான மோசடி செய்திகளை பார்த்துக் கொண்டு வருகிறோம். பணத்தை திருடும் கும்பல்கள் தற்போது அதிகமாகி விட்டனர்.

அந்த வகையில், வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வொர்க் பிரம் ஹோம் வாங்கி தருவதாக கூறி ஆன்லைனில் பணத்தை மோசடி செய்து வருகின்றனர்.

இவ்வாறு மோசடி செய்பவர்களிடம் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி சென்னை சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். இனையதளத்தில் மோசடி செய்யும் குற்றவாளிகள் அனைவரும் தற்போது ஒரு புதிய முறையை பயன்படுத்தி பணத்தை சூறையாடி வருகிறார்கள்.

அதாவது, இவர்கள் முதலில் நம்முடைய மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி மூலமாகவோ அல்லது வாட்ஸ் ஆப்பிலோ ஒரு இணைப்பில் தகவலை அனுப்புகிறார்கள்.

அதில், நீங்கள் வேலை தேடுகிறீர்களா உங்களுக்கு வீட்டில் இருந்த படியே ஒரு நாளைக்கு நாற்பதாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட வைக்கிறார்கள்.

எனவே, அவர்கள் அனுப்பி உள்ள இணைப்பை தொட்டால் அது டெலிகிராமில் அவர்களது சேனலுடன் இணையும். அதில், எங்கள் நிறுவனத்தில் நீங்கள் இணைந்ததற்கு நன்றி, உங்களுக்கு 15 டாஸ்க்குகள் கொடுப்போம்.

அதில் நீங்கள் வெற்றி பெற்று விட்டால் அதற்கு உங்களுக்கு முப்பது சதவிகிதம் கமிஷன் தொகை வழங்கப்படும் என்று கூறி இருப்பார்கள். இதற்கு முன்பணமாக 500 ரூபாய் அனுப்புகிறோம் என்று, உங்களது வங்கி விவரங்களை கேட்பார்கள்.

பிறகு ஆயிரம் ரூபாய் அனுப்புங்கள் அதனுடன் உங்களது முன்பணத்தை திருப்பி அனுப்புகிறோம் என்று கூறி விட்டு நம்முடைய வங்கியில் இருக்கக்கூடிய அனைத்து தொகையும் எடுத்துக்கொண்டு நம்முடைய இணைப்பை துண்டித்து விடுவார்கள்.

இந்த மோசடி செயலானது அதிகமாக பெண்களையும், வேலை தேடும் நபர்களையே குறிவைத்து எழுகிறது. இவ்வாறு மோசடி தொடர்பாக புகார் அளிக்க 1930 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.

எனவே, அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு சைபர் கிரைம் காவல் துறையினர் மக்களை எச்சரித்து வருகின்றனர். எனவே, ஆன்லைனில் வேலை தேடுபவர்கள் அந்த நிறுவனத்தை பற்றி எல்லாம் விசாரித்து விட்டு பிறகு அதில் இணையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.