மாணவர்களின் மேல்படிப்புக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா!! தந்தையை பார்த்து கண் கலங்கிய சூர்யா!! 

0
119
Scholarship awarding ceremony for students for higher studies!! Surya is confused seeing his father!!
Scholarship awarding ceremony for students for higher studies!! Surya is confused seeing his father!!

மாணவர்களின்  மேல்படிப்புக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா!! தந்தையை பார்த்து கண் கலங்கிய சூர்யா!!

சூர்யா தமிழ் திரைப்பட நடிகராக உள்ளார். மேலும் இவர் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளராகவும் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராவும் பணியாற்றி வருகிறார். இவர்  நந்தா, காக்க காக்க, பிதாமகன்,பேரழகன் , வேல், வாரணம் ஆயரம் போன்ற படத்தில் நடித்து ரசிகர் மனத்தில் இடம் பிடித்தார்.

மேலும் இவர் சினிமா மட்டுமின்றி அகரம் என்ற அறக்கட்டளை நடத்தி வருகிறார். அதன் மூலம் ஏழை, எளிய மாணவர்களை படிக்க வைத்து வருகிறார்.  ஒவ்வொரு நடிகர், நடிகையும் அவரிகளின் பிறந்த நாளுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் இவர் பிறந்த நாள் வரவிற்கும் நிலையில் தற்போது சூர்யா ரசிகர்கள் வடசென்னையில் அவர்கள் ரசிகர் உணவகத்தில் இலவச உணவு வழங்க உள்ளார்கள்.

ஒரு மாதம் சலையோரா வாசிகளுக்கு உணவு வழங்க உள்ளார்கள் என்ற தகவல் இணையத்தில் வெளிவந்தது. இது தினமும்  காலை 10  மணி முதல் இரவு 10  மணி வரை இலவச உணவு வழங்கப்பட உள்ளது. இந்த தகவல் அனைவராலும் பாராட்டி வந்தார்கள்.

இந்த நிலையில் சென்னையில் நடிகர் சிவக்குமார் கல்வி அறக்கட்டளை சார்பாக விழா நடைபெற்றது. அந்த விழாவில் கல்வி அறக்கட்டளை சார்பாக பெற்றோரை இழந்த 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மேல்படிப்புக்கு கல்வி உதவி தொகையை வழங்கினார்கள்.

இந்த விழாவில் நடிகர் சூர்யா, கார்த்தி மற்றும் சிவகுமார் என பலர் கலந்து கொண்டனர். இதில் சிவக்குமார் அவருடைய பள்ளிக் கால வாழ்க்கை பற்றி மாணவர்களிடம் கூறினார் . மேலும் தனக்கு அப்போது எல்லாம் நல்ல சாப்பாடு இல்லை அணி உடை இல்லை என்று உருக்கமாக கூறினார். அதனையடுத்து அவர் கஷ்டத்தை கூறி கண் கலங்கினார். இதனை பார்த்த சூர்யாவும் கண் கலங்கினார்.

Previous articleகுழு  பகவதி நகர் முகாமிலிருந்து 6,200 க்கும் மேற்பட்ட பக்தர்கள்!! பனிலிங்க தரிசனம்!! 
Next articleமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து!! முகாமிற்கு வந்த  பொது மக்கள் அலறியடித்து ஓட்டம்!!