மீண்டும் தள்ளிப் போகிறதா பள்ளிகள் திறப்பு.? அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை.!!

0
136

தமிழகத்தில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் ஆரம்பம் ஆகும் என்றும் அதற்கான வழிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டிருந்தது. ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவலின்படி நவம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறப்பது தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நவம்பர் 1ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுமா.? அல்லது பள்ளிகள் திறப்பது தள்ளிப்போகுமா.? என்பது குறித்து அக்டோபர் 12ம் தேதி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ளும் இந்தக் கூட்டத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுமா.? அல்லது தள்ளி போட வேண்டுமா.? என்பது குறித்து ஆலோசனை செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும், 10 ,11 , 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின் படி ஒன்றாம் வகுப்பு முதல்ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முதலில் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவுறுத்தி விட்டு அதன்பின் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் ஆரம்பம் ஆகும் என கூறப்படுகிறது.

மேலும், அக்டோபர் 12-ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக்குப் பிறகே ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து தெரியும். அதேபோல், 10 ,11 ,12வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குறித்த முடிவுகளும் எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபயன்படுத்தாத ரேஷன் கார்டுகள் முடக்கம்.!! அரசு அதிரடி அறிவிப்பு.!!
Next articleதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!