தமிழகத்தில் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறப்பு!! எதிர்க்கும் தனியார் கல்வி நிறுவனங்கள்!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் எடுக்கப்பட்டன. பின் ஆன்லைன் மூலமாகவே தேர்வுகளும் நடத்தப்பட்டன. இதனால் கடும் நிதி பற்றாக்குறையில் மூழ்கியது கல்வி நிறுவனங்கள். பின் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி கடந்த இரண்டு மாதகாலமாக 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன.
இதை தொடர்ந்து தற்போது தீவிரமாக பரவிவரும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மீண்டும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இந்த செய்தி அடுத்த கல்வி ஆண்டிற்கான அட்மிஷன் பணியில் தீவிரம் காட்டி வந்த கல்வி நிறுவனங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால் கடும் நிதி பற்றாக்குறையில் இருக்கும் கல்வி நிறுவனங்கள் எதிர்ப்பு சரிந்தது.
ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டால் பெற்றோர்கள் முழு கல்விக் கட்டணம் செலுத்த தயக்கம் கட்டுகிறார்கள். இதனால் கட்டுப்பாடுகளை அதிகரித்து அடுத்த கல்வி ஆண்டில் மீண்டும் பள்ளி கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று தனியார் கல்வி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு எப்பொழுதும் போல நேரடி வகுப்புகளை தொடர அனுமதிகொரினர் கல்வி நிறுவனங்கள். ஆனால் இதற்கு முழுமையாக பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.