ஜூலை 15 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு! மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு!!

0
147

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு வேகமாக பரவிக்கொண்டு இருக்கின்றது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கின்றன. மாணவர்களின் நலன் கருதி பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்ட நிலையில், மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வி ஆண்டில் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படுமா? அல்லது பள்ளிகள் திறக்கப்படுமா? என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், மாநிலங்களில் பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் குஜராத் மாநிலத்தில் ஜூலை 15ஆம் தேதி முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான கல்லூரிகளும் ஜூலை 15 திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில் ஜூலை 16ம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மற்ற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்ததால் விரைவில் தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleசர்க்கரை என இதை சாப்பிட்ட குழந்தையின் பரிதாப நிலை! பெற்றோர் பரிதவிப்பு!
Next articleஎம்.எல்.ஏ பவுலிங், முதல்வர் பேட்டிங்! ஆய்வுப்பணிக்கு சென்று ஆர்வத்துடன் கிரிக்கெட் விளையாடிய முதலமைச்சர்!