பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிழப்பு! தேடுதல் வேட்டையில் காவல்துறை!

பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிழப்பு! தேடுதல் வேட்டையில் காவல்துறை!

வீட்டின் பின்புறம் பிளஸ் 2 மாணவி இறந்துகிடந்த சம்பவம் திருவாரூரில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மகிழஞ்சேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி செந்தில்குமார். இவருக்கு ஒரு மகனும், மெளனிகா என்ற மகளும் உள்ளனர். மெளனிகா பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு ஊரடங்கு காரணமாக விடுமுறையின் வீட்டில் இருந்து வந்துள்ளார். முந்தைய நாள் இரவு பாட்டி வீட்டில் உறங்கச் செல்வதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் வீட்டின் பின்புறம் உள்ள வயல் பகுதியில் நேற்று சடலமாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை வயலுக்கு சென்ற கிராம மக்கள் மௌனிகாவின் சடலத்தை பார்த்து மிரண்டுபோய் காவல்துறைக்கும், அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற நன்னிலம் பகுதி காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மௌனிகா எதனால் இறந்தார் என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. வீட்டின் பின்புறமே இறந்தகிடந்த சம்பவம் போலீசாருக்கு மர்மமான சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மௌனிகா உடலில் ஏராளமான காயங்கள் இருந்ததால் சந்தேகம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசாரால் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த பிளஸ் 2 மாணவி மௌனிகா ஒரு குறும்படத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment