உலக அளவில் பள்ளி மாணவர்கள் சாதனை!!

Photo of author

By Parthipan K

உலக அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் சென்னையை சேர்ந்த வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்தனர்.

உலக அளவில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் இணையவழி ‘சர்வதேச பிகாஸோ ஓவியப் போட்டி’ நடைபெற்றது. இந்த ஓவியப் போட்டியில் சென்னையை அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி மாணவர்கள் பங்கேற்று தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் ஜி.வி.மல்லிகா ஷிவானி என்ற மாணவி கிரியேட்டிவ் டைமண்டு ஆர்டிஸ்ட் என்ற போட்டியிலும், மாணவன் கே.பி.ஆதித்ய கிருஷ்ணன் கிரியேட்டிவ் கோல்ட் ஆர்டிஸ்ட் என்ற ஓவிய போட்டியிலும் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் சர்வதேச திறன்மிகு படைப்பாளர்கள் விருது வழங்கி பாராட்டினர். ஓவிய போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கும், இதற்கு காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கும் வேலம்மாள் கல்வி குழுமத்தின் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம், இயக்குனர் எம்.வி.எம்.சசிகுமார் ஆகியோர் பரிசு வழங்கி, பாராட்டு தெரிவித்தனர்.