பள்ளி மாணவர்களே உங்களுக்கு தான்.. கனமழை அலார்ட்!!

Photo of author

By Rupa

பள்ளி மாணவர்களே உங்களுக்கு தான்.. கனமழை அலார்ட்!!

கோடை விடுமுறை முடிந்து அதன் தாக்கம் குறையாத காரணத்தினால் பள்ளி திறப்பு தேதி சற்று தள்ளி வைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி விடுமுறை அளித்த நாட்களுக்கு ஏற்ப சனிக்கிழமை தோறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு பள்ளிகள் திறந்து ஓர் வாரத்திற்குள்ளேயே பருவமழை காரணமாக குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் உண்டானது. அந்த வகையில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மேலாக கனத்த மழை பெய்ததால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.

இதே போலவே இன்றும் கனத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.மேலும் மாணவர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக குடை மற்றும் ரெயின் கோட் போன்றவற்றை எடுத்துச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

அந்த வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் கனத்த மழை பெய்யும் என கூறியுள்ளனர்.

ஆனால் பள்ளி விடுமுறை குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வரை வெளியிடவில்லை.