இங்கு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்! இந்த மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை!
வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியது.மேலும் மழை தீவிரம் அடைந்து வருகின்றது.அதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பரவலான மழையும் பெய்து வந்தது.அதனால் நேற்று சென்னை ,திருவள்ளூர் செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் ,ராணிப்பேட்டை ,வேலூர் ,திருப்பத்தூர் ,திருவண்ணாமலை ஆகிய இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்தது. அதனால் அங்கு உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்தார்.
இந்நிலையில் இன்று மழை சற்று குறைந்த நிலையில் சென்னை ,செங்கல்பட்டு ,திருவள்ளூர் ,மதுரை மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்.என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் ஒரு சில இடங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது அதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விப்புரம் ,புதுச்சேரி ,காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.