பள்ளிகளுக்கு முககவசம் அணிந்து வர வேண்டும்

Photo of author

By Parthipan K

பள்ளிகளுக்கு முககவசம் அணிந்து வர வேண்டும்

Parthipan K

Updated on:

உலகம் முழுவதும் கொரோனா 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. இதனால் எல்லா தொழில்நுட்ப நிறுவங்களும் முடக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகலும் மூன்று மாதங்களாக செயல்படவில்லை இந்த நிலையில் இங்கிலாந்தில் பள்ளிகள் செப்டம்பர் மாதத்தில் திறக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ்  ஜான்சன் அறிவித்தார். இதுபற்றி அவர் கூறும்போது இந்த வைரஸ் மிகவும் கொடுமையானது இனிமேலும்  பள்ளிகள் திறக்காமல்  விட்டால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் இதனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்படுகின்றன என கூறினார். மேலும் பள்ளிகளில் மாணவர்கள் அனைவரும் முககவசம் அணிந்தும் சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.