சனி கிழமை விடுமுறை ஞாயிற்றுக்கிழமையில் பள்ளிகள் திறப்பு! கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
கொரோனா தொற்று மூன்றவது அலை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் சரிவர திறக்கப்படவில்லை. ஆன்லைன் முறையில் பாடங்களை கற்று வந்தனர். சிறார்களுக்கான தடுப்பூசிகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. அவ்வாறு இருக்கையில் இரண்டு வருடகாலமாக பொதுத்தேர்வு நடைபெறவில்லை. இம்முறையும் தொற்று பாதிப்பு அதிகரித்து இருந்ததால் தேர்வு நடைபெறாது என்று பல வதந்திகள் பரவியது. ஆனால் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இம்முறை கட்டாயம் பொது தேர்வு நடைபெறும் என கூறியிருந்தார்.
அவர் கூறியதற்கேற்ப பொதுத் தேர்வுக்கான அட்டவணையும் வெளிவந்தது.தொற்று காரணமாக ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்தி வந்ததால் முழுமையாக பாடத்திட்டங்களை முடிக்கும் முடியவில்லை. அதனால் இம்முறை தேர்வை மே மாதம் நடத்த திட்டமிட்டனர். மேலும் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற அமைப்பில் பெற்றோர்கள் பங்கு சற்று குறைவாகவே இருந்துள்ளது. அவர்களின் பங்கை அதிகரிக்க செய்ய தற்பொழுது கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, பள்ளி மேலாண்மை குழுக்களை மறுசீரமைக்க தற்போது பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
அதனால் மார்ச் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்த உள்ளனர்.இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் அனைத்து குழந்தைகளின் பெற்றோர்களும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த விழிப்புணர்வு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதால் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அளித்துள்ளனர்.இந்த கூட்டத்தின் மூலம் ஓர் இருபது பேர் கொண்ட குழு உருவாக்கப்படும். அதற்கு ஒரு தலைவர் நியமிக்கப்படுவார்.மேலும் அந்த தலைவருக்கு ஒரு சிறப்பு குழந்தையின் பெற்றோர் துணைத்தலைவராக அமர்த்தப்படுவர்.
இந்தக் குழுவில் தன்னார்வலர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள் என அனைவரும் உறுப்பினராக இருப்பார்கள் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார். இந்த பள்ளி மேலாண்மை குழுக்களை சீரமைக்கும் பணியில் புதிய உறுப்பினர்களை ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். அதன்படி சனிக்கிழமை விடுப்பு அளித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இந்தக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.