தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு..வரும் 25ம் தேதி முக்கிய அறிவிப்பு-பள்ளிக்கல்வித்துறை.!!

Photo of author

By Vijay

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வட்டார கல்வி அலுவலர் அவர்கள் எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் 25ஆம் தேதிக்குள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு வருகிற நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், தொடக்க மற்றும் நடுநிலை கல்வி இயக்க நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தொடக்கநிலை மாணவர்களை உளவியல் ரீதியாக தயார் படுத்த எழுத்து, கதை கூறுதல், ஓவியம் வரைதல் போன்றவற்றை செய்ய சொல்லி அவர்களை தயார்படுத்த வேண்டும்.

இதையடுத்து அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் இருக்கிறதா என்பதை 25ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது இந்த ஆய்வினை மேற்கொள்வதற்கு மூன்று படிநிலைகளில் ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு மாவட்ட வட்டாரத்திலும் 25% பள்ளிகளை மாவட்ட கல்வி அலுவலர்களும், 5% பள்ளிகளில் முதன்மை கல்வி அலுவலர்களும் 25 ஆம் தேதிக்குள் பார்வையிட்டு ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்று காலகட்டத்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.